Monday, August 1, 2011

தமிழ் சினிமா-விஜயகாந்த் கதை - விஜயகாந்த்தை வெறுத்த நடிகைகள்-3

இந்த படத்தை புதுக்கோட்டை முன்மாதிரி பள்ளியில் படிக்கும் போது எஸ்.வி.எஸ்.திரைஅரங்கில் பார்த்தேன்.புல்லட் ஓட்டிக் கொண்டு வரும் விஜயகாந்த் அறிமுக காட்சி அமர்க்களமாக இருக்கும். படம் மிகப்பெரிய வெற்றி. விஜயகாந்தின்அழுத்தம் திருத்தமான வசன உச்சரிப்பு , பழி வாங்கும் கதைக்கு ஏற்றாற்போல் உருண்டு திரண்ட சிவந்த விழிகள் (அவரின் விழிகளுக்காகவே 'சிவந்த கண்கள்' என்ற படத்தை பின்னர் ராம.நாராயணன் எடுத்தார் . ) முரட்டு தோற்றம்  என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் .
                           
                                               படத்தில் வந்த 'சட்டம் ஒரு இருட்டறை அண்ணா சொன்னார் 'பாடல் (சங்கர்) கணேஷ் அவர்கள் திரையில் தோன்றிப் பாட பெரும் வரவேற்பு . என்றும் , நினைவில் நீங்காத மெலடி 'தனிமையிலே ஒரு ராகம்' சுரேந்தரின் சுந்தர குரலில் ஹிட்.விஜயகாந்திற்கு பலமான அஸ்திவாரம் போட்டது போல தெரிந்தது. ஆனால்......  

Friday, July 29, 2011

தமிழ் சினிமா-விஜயகாந்த்தை வெறுத்த நடிகைகள்-2-

விஜயகாந்த் 'இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகமானார் .தொடர்ந்து,'தூரத்து இடிமுழக்கம்' , 'அகல்விளக்கு' போன்ற படங்களில் நடித்தாலும் அவருக்கு , இன்று வரை விஜயகாந்த் என்பவர் அநீதியை தட்டிக்கேட்பவர் என்ற உருவாக்கத்தை பெற்றுத்தந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப் படம் 'சட்டம் ஒரு இருட்டறை'.இப்படத்தின் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

Thursday, July 28, 2011

தமிழ் சினிமா-விஜயகாந்த்தை வெறுத்த நடிகைகள்.

விஜயகாந்த்தை வெறுத்த நடிகைகள்.
இன்று கருப்பு எம்.ஜி.ஆர். என்று போற்றப்படுபவர், தமிழ் நாடு சட்டமன்றத்தின் எதிர் கட்சித் தலைவர் விஜயகாந்த் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. ஒரு காலத்தில் இவருடன் நடிக்க நடிகைகள் பலரும் தயங்கினார்கள் என்பது வேதனையான விசயம்.
                                                சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் ப்ரகாசிக்க தொடங்கிய நேரம். திரையுலகில் நட்சத்திரமாக மின்ன நிறமோ,அழகோ ஒரு தடை அல்ல என்று ரஜினி நிரூபித்த நேரம்.ரஜினியைப் போல் தோற்றம் கொண்ட பலர் திரயுலக ஆசையில் சென்னையை முற்றுகையிட்டனர். அதில் நளினி காந்த்,சூர்ய காந்த் என்று பலர் இருப்பினும் தனித்துவம் பெற்று வெற்றி பெற்றவர் விஜயகாந்த் மட்டுமே.                                                  தொடரும்....

Wednesday, June 8, 2011

கருத்து சொல்ல வாங்க!

செய்திகள் , வாழ்க்கை, சினிமா , அரசியல், எதைப்பற்றி வேண்டுமானாலும் உங்கள் கருத்துக்களை சூடாக பரிமாறிக்கொள்ளலாம். உங்கள் நண்பன்கன்வர்