இந்த படத்தை புதுக்கோட்டை முன்மாதிரி பள்ளியில் படிக்கும் போது எஸ்.வி.எஸ்.திரைஅரங்கில் பார்த்தேன்.புல்லட் ஓட்டிக் கொண்டு வரும் விஜயகாந்த் அறிமுக காட்சி அமர்க்களமாக இருக்கும். படம் மிகப்பெரிய வெற்றி. விஜயகாந்தின்அழுத்தம் திருத்தமான வசன உச்சரிப்பு , பழி வாங்கும் கதைக்கு ஏற்றாற்போல் உருண்டு திரண்ட சிவந்த விழிகள் (அவரின் விழிகளுக்காகவே 'சிவந்த கண்கள்' என்ற படத்தை பின்னர் ராம.நாராயணன் எடுத்தார் . ) முரட்டு தோற்றம் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் .
படத்தில் வந்த 'சட்டம் ஒரு இருட்டறை அண்ணா சொன்னார் 'பாடல் (சங்கர்) கணேஷ் அவர்கள் திரையில் தோன்றிப் பாட பெரும் வரவேற்பு . என்றும் , நினைவில் நீங்காத மெலடி 'தனிமையிலே ஒரு ராகம்' சுரேந்தரின் சுந்தர குரலில் ஹிட்.விஜயகாந்திற்கு பலமான அஸ்திவாரம் போட்டது போல தெரிந்தது. ஆனால்......
No comments:
Post a Comment