சென்னையில் மட்டும் 37 தியேட்டர்களில் அஞ்சான் ரிலீஸ்
ஒரு காலத்தில் தமிழ் சினிமா, தமிழ் நாடு முழுவதுமே 40 தியேட்டருக்குள்தான் வெளிவரும். ஆனால் சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள அஞ்சான் படம் சென்னை நகரில் மட்டும் 37 தியேட்டர்களில் ரிலீசாகிறது. வருகிற 15ந் தேதி வெளிவரும் படத்திற்கு முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.
அஞ்சான் படத்தின் சென்னை நகர திரையீட்டு உரிமையை அபிராமி மால் வாங்கியுள்ளது. இதுகுறித்து அபிராமி ராமநாதன் கூறியதாவது:
முன்பெல்லாம் புது படங்கள் சென்னையில் 5 தியேட்டர்களில்தான் ரிலீசாகும். ரஜினி நடித்த சிவாஜி படத்தை வாங்கிய நாங்கள் அதனை 18 தியேட்டர்களில் திரையிட்டோம். இப்போது அஞ்சான் படத்தை வாங்கி 37 தியேட்டர்களில் திரையிடுகிறோம். காரணம் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திருட்டு விடிசி வாங்கி விடக்கூடாது என்பதற்காக. அவர்கள் நடந்து போகிற தூரத்தில் உள்ள அத்தனை தியேட்டர்களிலும் திரையிடுகிறோம். சூர்யா, லிங்குசாமியின் கோல்டன் டச்சை நம்பி படத்தை வாங்கி இருக்கிறோம்
எங்கள் தியேட்டரில் ஆன்லைன் ரிசர்வேஷசன் தொடங்கிய இரண்டு மணி நேரத்துக்குள் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டது. இதுவும் ஒரு சாதனை அளவாகும். என்றார் அபிராமி ராமநாதன்.
No comments:
Post a Comment