Tuesday, October 27, 2020
செல்வராகவன் அடுத்த பட ஹீரோ தனுஷ் இல்லை! வேறு யார்?
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர உள்ள அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்தது.ஆனால் தனுஷ் தற்போது நடிக்கும் சூழல் இல்லாததால் செல்வராகவன் தனது தேர்வாக கௌதம் கார்த்திக் கை அணுகி ஒப்பந்தம் செய்துள்ளார்
Saturday, October 24, 2020
பிக் பாஸ் வீட்டில் 18 வதாக நுழையும் பிரபலம்! தரமான சம்பவம்
பிண்ணனி பாடகி சுசித்ரா 18 வது நபராக பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக தெரியவந்துள்ளது.ஏற்கனவே சுசி லீக்ஸ் இல் பிரபலமானவர் சுசித்ரா.தற்போது பிக்பாஸ் வீட்டில் நுழைவதால் பரபரப்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எகிறுகிறது.
Sunday, May 17, 2020
மாஸ்டர் விமர்சனம். vijays master review பிகில் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர்.இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பல இளம் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடித்துள்ளார்.கடந்த மாதம் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ரிலீஸ் தேதிகாக காத்து கொண்டு இருக்கின்றனர்.மேலும் தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.அப்படத்தில் நடிகை மாளவிகா மோகனனுக்காக டப்பிங் செய்த ரவீனா மாஸ்டர் படத்தின் காட்சிகளை பார்த்துவிட்டு மிரண்டு போனாராம், மேலும் டப்பிங் முடித்துவிட்டு வெளியே வரும்போது "படம் வேற லெவல்" என கூறியுள்ளார்.
Wednesday, March 11, 2020
மாதா உன் கோவிலில் song music notes
Song : மாதா உன் கோவிலில்


Film
: AchANi
Notes: s r1 g2 m1 p d1 n2
S
c
c# d# f g g# a#
C
GREAT MAESTRO ILAYARAAJA MUSIC
மாதா உன் கோவிலில்
மணி
தீபம்
ஏற்றினேன்
p.n.r
s s s rsn.srsn. p.n. g r s s s
ga#c#c cc c#ca#.cc3ca#. ga#d
c# ccc
தாயென்று உன்னைத்தான் தாயென்று
உன்னைத்தான்
sr
m m m p mg3 sr pm m pmp
pnd pmg
cc#f ffg f fe cc#gf f gfg ga#g#gfd#
பிள்ளைக்கு காட்டினேன் மா..தா
gp
pd m gr n.r gpm grgms
d#ggg# f
d#c#a#c# d#gf d#c#d#fc
Stanza
1:
மேய்ப்பன் இல்லாத மந்தை
வழி
மாறுமே
dS
d m m m mp mg3 g3g3 p d n Snp
g#Cg# fff fg fe ee
gg#a# C a#g
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
pnR
S S S SR nSpnp p n nRS S
ga#C# C
C C CC# a# C ga#g ga# a#C#CC
மெழுகு
போல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா
p
p pd pdpm mm mpmp gp pd m gr n. r
gg g g#gg# f
ff fgfg ef
gg#f ec#a#c#
மா..தா
gpm
grgms
egf ec#efc
Stanza 2: (notes similar to Stanza 1)
kaval illadha jeevan kanneerile
karai kandidadha Odam thanneerile
arul tharum thiruchabai maniyosai ketkumo madha
Stanza 3: (notes similar to Stanza 1)
piLLai peradha penmai thayanadhu
annai illadha maganai thalattudhu
kartharin kattalai nan enna solvadhu madha
Thursday, March 5, 2020
ஜிப்ஸி - சினிமா விமர்சனம்
ஜிப்ஸி - சினிமா விமர்சனம்
காஷ்மீரில் பிறந்து, பெற்றோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட, குதிரையை வைத்து வேடிக்கைகாட்டும் ஒருவரால் வளர்க்கப்படுகிறான் ஜிப்ஸி (ஜீவா). ஊர் ஊராகப் பயணம் செய்யும் ஜிப்ஸி ஒரு முறை நாகூருக்கு வரும்போது, அங்குள்ள இஸ்லாமியப் பெண் (நடாஷா சிங்) அவனைக் காதலிக்கிறாள். இவரும் வட மாநிலம் ஒன்றுக்குச் சென்று திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை பிறக்கும் தருணத்தில் கலவரம் வெடிக்க, அதில் சிக்கி திசைக்கு ஒருவராகப் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா என்பது மீதிக் கதை.
தன் மகளின் விருப்பங்களைக் கடுமையாக எதிர்க்கும் இஸ்லாமிய தந்தை, வட மாநிலங்களில் கலவரங்கள் ஏற்படுத்தப்படும் விதம், அதில் சின்னாபின்னமாகும் பலரது வாழ்க்கை, கலவரங்களில் ஈடுபடுபவர்களின் பின்னணி, கலவரங்களின்போது காவல்துறை நடந்துகொள்ளும்விதம் என நீளும் இந்த அடுக்குகளை காட்சியாக்கியிருப்பதில் தெரியும் துணிச்சல் ஆச்சரியமளிக்கிறது. ரசிக்கவைக்கிறது.
தமிழில் வந்த பல திரைப்படங்களில் மதக் கலவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்தப் படம், சம்பந்தப்பட்டவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் நெருக்கமாகக் காட்டுகிறது. அடிப்படையில் பார்த்தால், ஜிப்ஸி ஒரு காதல் கதையாகத் தென்பட்டாலும், கலவரங்களும் அவற்றால் சிதையும் அப்பாவி மக்களின் வாழ்க்கையும்தான் இந்தப் படம்.
படத்தின்
சில பகுதிகள் தமிழ் சினிமாவுக்கே உரியவையாக
இருக்கின்றன. திருவிழாவில் வேடிக்கைகாட்ட வரும் ஒருவனை நம்பி
ஒரு பெண் வாழ்வை ஒப்படைப்பது,
அந்த ஜிப்ஸியை பல மாநிலங்களில் பலருக்கும்
தெரிந்திருப்பது போன்றவை உறுத்துகின்றன. ஒரு
கலவரத்தின்போது, இந்துவாகவும் முஸ்லிமாகவும் இல்லாத ஒருவன் சிக்கிக்கொண்டு,
எப்படி போராடுகிறான் என்பதற்கு ஜிப்ஸியின் பாத்திரம்தான் பொருத்தமானது. ஆனால், படத்தில் வரும்
பிற சம்பவங்களுக்கு அது பொருத்தமாக இல்லை.
நாயகன் ஜீவாவுக்கு வித்தியாசமான பாத்திரம். புதுமுகமாக வரும் நடாஷா, ஒரு நல்ல அறிமுகம். அவரது தந்தையாக வரும் லால் ஜோஷ், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் இசை படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு, பாடல்கள் உறுத்தாமல் இருப்பது இந்தப் படத்தில்தான். அதேபோல, ஒளிப்பதிவும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. எல்லாக் காட்சிகளுமே சம்பந்தப்பட்ட இடத்திலேயே எடுக்கப்பட்டிருப்பதும் கலவர காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சிறப்பு.
ராஜு முருகனின் முந்தைய படங்களில் தெரிந்த பல பலவீனங்களை இந்தப் படத்தில் அவர் தாண்டிச் சென்றிருக்கிறார். மேலும் சிறப்பான படங்களை எதிர்பார்க்க வைக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)