Thursday, May 22, 2014
Tuesday, May 13, 2014
‘‘கோச்சடையான் வதந்திகள் . படம் வருகிற 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும்.
‘‘கோச்சடையான் வதந்திகள் . படம் வருகிற 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும்.
கோச்சடையான் படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி, ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டு விட்டது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டு விட்டது.
3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.
இதுதவிர, ஏற்கனவே சுமார் 4 ஆயிரம் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்துக்குள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டன. அதன்பிறகு மேலும் 2 ஆயிரம் திரையரங்குகள் கோச்சடையான் படத்தை திரையிட முன்வந்துள்ளன.
3டி வடிவத்தில் தயாராவதில் ஏற்பட்ட தாமதத்தினால், கோச்சடையான் படத்தை அனைத்து திரையரங்குகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப கால அவகாசம் தேவைப்பட்டது. படம், வருகிற 23–ந் தேதி அன்று வெளியாக தயார் நிலையில் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்.
ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி, கோச்சடையான் படம் மே 23–ந் தேதி உறுதியாக வெளியாகும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
Monday, May 12, 2014
சந்தானத்தின் அவதாரம் :வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் .விமர்சனம்.
சந்தானத்தின் அவதாரம் :வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் .விமர்சனம்.
கதைப்படி ஹீரோ சந்தானம், பழைய சைக்கிள் ஒன்றில் கடை கடையாக வாட்டர்கேன் போடும் வாட்டர் சப்ளையர் வேலை பார்க்கிறார். சந்தானத்தின் "கறார் முதலாளி ஒருநாள், லோன் போட்டாவது நீ "சின்ன யானை லோடு ஆட்டோ வாங்கி வந்தால் தான் உனக்கு வேலை, அதுவரை நம் பிஸினஸூக்கு இந்த ஓட்(டை)ட சைக்கிள் ஒத்து வராது, நீயும் ஒத்து வரமாட்டாய்... என உதறிவிட, கதறி துடிக்கும் சந்தானம் காசுக்காக நாயாய், பேயாய் அலைகிறார்.
காலணா காசு கிடைத்தபாடில்லை... கடுப்பாகும் சந்தானம், அப்பா, அம்மாவை இழந்த அநாதையான தனக்கு, அடைக்கலம் கொடுத்திருக்கும் தூரத்து உறவிடம் பொழப்புக்கு என்ன செய்வேன்? என புலம்புகிறார். அந்த உறவோ, ஏன்? உனக்கென்ன குறை...? உனக்கு ஊரில் உங்க அப்பா சொத்து கொஞ்சம் இருக்கிறது என உயிலை எடுத்து காண்பிக்கிறார். அது கண்டு முகம் மலரும் சந்தானம் அதை கொடுங்கள், அந்த சொத்தை வித்து நான் பிழைத்து கொள்கிறேன் என்கிறார். ஆனால் அந்த உறவோ, அந்த ஊரில் பெரும் பகையும் உன் குடும்பத்திற்க இருக்கு என்பதால் தான் கடைசி வரை இந்த சொத்து விபரத்தை உன்னிடம் கூறாமல், வீட்டு வேலை செய்து உன்னை வளர்த்தார் உன் தாய்... அதனால் இந்த உயிலை இப்போதைக்கு உன்னிடம் தர முடியாது, நீ வெறுத்து போய் பேசியதால் உனக்கு ஆறுதல் அளிக்கும்படியாக இந்த உயிலை காண்பித்தேன், என்று கூற, பிடிவாதமாக அவரிடம் உயிலை பிடுங்கி கொண்டு அரவங்காடு எனும் அழகிய ஊரில் இருக்கும் தன் பூர்வீக சொத்தை விற்க ரயிலேறுகிறார் சந்தானம். தனக்கு ஆபத்பாந்தனமாக அதுநாள் வரை இருந்த சைக்கிளையும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டும் கிளம்பும் சந்தானம், ரயிலில் ஹீரோயினை சந்திக்கிறார்.
தன் பூர்வீக சொத்து விற்பனை சம்பந்தமாக ஊர் பெரிய மனிதரான ராயர் வீட்டுக்குபோகும் சந்தானம், அங்கு அவர்கள் வழக்கப்படி விருந்தாளியாக உபசரிக்கப்படுகிறார். என்ன ஆச்சர்யம்.?! ராயரின் மகள்தான் சந்தானம் ரயிலில் சந்தித்த நாயகி ஆஷ்னா சவேரி என்பதும், அதைவிட ஆச்சர்யம், ப்ளஸ் அதிர்ச்சி, ஆஷ்னா சவேரி சந்தானத்தின் முறைப்பெண் என்பதும், ஆஷ்னாவின் அப்பா ராயரும், சகோதரர்களும் தான் 27 வருட பகையுடன் சந்தானத்தை போட்டுத்தள்ள காத்திருக்கும் பகையாளிகள் என்பதும் தான் டுவிஸ்ட். டுவிஸட்டுக்கே டுவிஸ்ட்!
தங்கள் வீட்டிற்குள் கொலை செய்வதில்லை... எனும் கொள்கையுடைய ராயரும், அவரது மகன்களும் விருந்தாளியான சந்தானத்தை வெளியில் வரவைத்து கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். அதை தெரிந்து கொள்ளும் சந்தானம், அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் ஜமாய்ப்பது தான் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் காமெடி கதைக்களம்! இதில் அதகளம் செய்திருக்கும் சந்தானம், வீட்டை விட்டு வெளியில் வந்தாரா? பகையாளிகளை வென்றாரா? பகையை கொன்றாரா? நாயகியின் காதலை உணர்ந்தாரா.? அவரை மணந்தாரா? என்பது தான் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ்!
சந்தானம் வழக்கம் போலவே வரும் சீன்களில் எல்லாம் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார். அதிலும் ராஜகுமாரன் கோஷ்டியுடன் அவர் செய்யும் அலும்பு செம காமெடி! ஹீரோவாக நடித்திருப்பதால் உஷாராக வழக்கமான தனது இரட்டை அர்த்த வசனங்களை எல்லாம் தவிர்த்து "பன்ச் டயலாக்கு பேசி பட்டையை கிளப்பி இருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல! அதிலும், "டைமிங்காக, ""மதுரை பெருமை பேச சசிக்குமார், விஷால் எல்லாம் இருக்காங்க, சென்னையை பற்றி பேச என்னை விட்டா யார் இருக்கா.? எனக்கேட்டும் இடத்திலாகட்டும், ""பொண்ணுங்களோட "ஆக்சலேஷன் மயிண்டு தான் பல காதல் பிரிவுக்கு காரணம் என்றும், அதையும் மீறி அப்பா அம்மா, எப்படியும் பிரிச்சுடுவாங்கக்கிற தைரியத்தல தான் பொண்ணுங் காதலிக்கவே செய்றாங்க என்றும்..., அவர் அடிக்கும் பன்ச்கள் ஆகட்டும், அதற்கு உதாரணமாக அதே ரயிலில் பிரயாணிக்கும் ஒரு ஆணையும், பெண்ணையும் வைத்து சொல்லும் ரஜினி, கமல், மாதவன், சிம்பு, டயலாக்குகள் ஆகட்டும்... இன்னும் இஷ்டத்திற்கு கொளுத்தி போடும் சிரிப்பு வெடிகளில் ஆகட்டும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. கீப் இட் ஞூப் சந்தானம்!
ஆஷ்னா சவேரி, அசப்பில் சற்றே சதை போட்ட ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கிறார். நடிப்பிலும், இளமை துடிப்பிலும் கூட அப்படியே. "மிர்ச்சி செந்தில், விடிவி கணேஷ், ராஜகுமாரன் உள்ளிட்டவர்களும் ஓ.கே.!
சித்தார்த் விபினின் பின்னணி இசை பலம். பாடல்களும், அதன் இசையும் பலவீனம். (ரீ-மேக் படத்திற்கு கூட டப்பிங் படங்கள் மாதிரியே தான் பாடல்கள் இருக்க வேண்டுமா? என்ன.?!) சக்தி, ரிச்சர்ட் என்.நாதன் இருவரின் ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. ரஜினியின் அண்ணாமலை படத்திற்குப்பின் "மதிவண்டியையும் ஒருபாத்திரமாக்கி, அதற்கு டி.ஆர். டைப்பில் ஒரு குரலையும் கொடுத்திருப்பதற்காக இயக்குநர் ஸ்ரீநாத்தை பாராட்டலாம்!
ஆகமொத்தத்தில், ""வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - ரசிகர்கள் ""சந்தானத்தை ஹீரோவக்கியுள்ள ஆயுதம்!
Sunday, May 11, 2014
தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம்!
தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம்!

ஒரு 7 நிமிட தமிழ் குறும்படம் பியூச்சர் பிலிம் அல்லாத கேட்டகிரியில் தேசிய விருது பெற்றுள்ளது. தர்மம் என்ற அந்த குறும்படம் ஏழரை நிமிடங்கள் ஓடக்கூடியது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் விருது பெற்ற இந்தப் படம், கேன்ஸ் திரைப்பட விழா வரை சென்று, தற்போது தேசிய விருதினை பெற்றுள்ளது. இதனை மனோன் எம்.அஸ்வின் என்பவர் இயக்கி இருக்கிறார். இதுவரை 7 குறும்படங்களை இயக்கி உள்ள இவர், தற்போது பிரபு சாலமனிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
ஒரு பணக்கார வீட்டு தம்பதிகள் தங்கள் மகனை பிச்சைக்கார சிறுவன்போல் வேடம் அணியச் செய்து பயிற்சி கொடுத்து பள்ளி மாறுவேட போட்டிக்கு அழைத்துச் செல்கிறார்கள். போகிற வழியில் போக்குவரத்து போலீஸ் லஞ்சம் வாங்குவதையும், அப்பா போக்குவரதுது போலீசுக்கு லஞ்சம் கொடுப்பதையும், வயதான நிலையில் பிச்சையெடுக்கும் முதியவரையும் சந்திக்கிறான். வீட்டில் சொல்லிக்கொடுத்த வசனங்களை மறந்து அந்த பிச்சைக்காரர் சொன்னதையே மேடையில் சொல்லி கைதட்டல் வாங்குகிறான். நிஜமான பிச்சைக்காரர் தர்மம் வாங்குகிறார் .மற்றவர்கள்தான் பிச்சை எடுக்கிறார்கள். இதுதான் குறும்படத்தின் அடிப்படை.
மிஷ்கின் இயக்கும் புதிய படம் பிசாசு.இசை மேஸ்ட்ரோ இளையராஜா!
மிஷ்கின் இயக்கும் புதிய படம் பிசாசு.இசை மேஸ்ட்ரோ இளையராஜா!
Friday, May 9, 2014
ராஜராஜசோழனின் போர்வாள் படத்தின் பாடல் கம்போசிங்கை மக்கள் மத்தியில் நடத்திய மேஸ்ட்ரோ இளையராஜா.சினேகன்
ராஜராஜசோழனின் போர்வாள் படத்தின் பாடல் கம்போசிங்கை மக்கள் மத்தியில் நடத்திய மேஸ்ட்ரோ இளையராஜா.சினேகன்
ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்றுதான் அப்படி செய்தோம். ஆனால், இதைப்பற்றி நான் இளையராஜாவிடம் சொன்னபோது, அது சாத்தியப்படுமா என்றார். ஆனால் கண்டிப்பாக ஆகும் என்றேன். உங்களுக்கு சாத்தியம் என்றால் நான் வருகிறேன் என்றார். அதையடுத்து ராஜராஜசோழனின் குரு கரூர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தை தேர்வு செய்து மக்கள் முன்னிலையில் பாடல் கம்போஸிங் செய்தார் இளையராஜா.
அதில் 25000 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுவரை எந்த இசையமைப்பாளர்களும் செய்யாத சாதனை அது. கரூரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமும், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கினோம்.
* அப்போது இளையராஜாவின் மனநிலை எப்படி இருந்தது?
அந்த நிகழ்வின்போது இளையராஜா கண் கலக்கிபோனார். 37 வருடமாக என்னை அடைத்து போட்டுவிட்டனர். இன்றைக்குத்தான் முழுசாக வேலை பார்த்த திருப்தி கிடைத்துள்ளது என்று சொன்ன இளையராஜா, எனது சரித்திரத்தில் சினேகனுக்கும் ஒரு இடம் உண்டு என்று சொன்னார். அந்த வார்த்தைதான் இந்த படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாகும்.
* சரித்திர கால கதை என்கிறபோது பட்ஜெட் எகிறுமே?
இந்த படத்தில் சரித்திர காலம், நிகழ் காலம் என இரண்டும் இடம்பெறுகிறது. இருப்பினும் தேவையான செலவை எந்த குறையும இல்லாமல் செய்திருக்கிறேன்.
மேலும், இந்த படம் மீது இளையராஜாவுக்கு பிரியமும், ஈடுபாடும் அதிகம். அவரைப்பற்றி ஆயிரம் பக்க அளவில் ஒரு புத்தகமே எழுதுவேன். அவர் ஒரு ஞான குழந்தை போல் செயல்பட்டுள்ளார். மேலும் அவரிடத்தில் இந்த இளையராஜா வேண்டாம் 80களில் உள்ள இளையராஜாதான் எனக்கு வேண்டும் என்றேன். பதிலுக்கு சிரித்தார். என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்யுங்கள் என்றேன். செலவுக்கணக்கைப் பார்க்கும் அளவுகோல் வேண்டாம். எனக்கு இளையராஜாதான் வேண்டும் என்றேன். அதனால் பாடல்களுக்கு தேவையான செலவை தாராளமாக செய்து பாடல்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில், இது இளையராஜாவின் படம். 1100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நீதி மன்னனுக்கும், இளையராஜாவின் இசைக்கும் இருக்கிற உறவுதான் இந்த படம். இந்த இடத்தில் இன்னொரு விசயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளையராஜா, திரும்பி வீட்டிற்கு வந்த உடனேயே என்னை அழைத்தார். நாளைக்கே ரெக்கார்ட்டிங் வச்சிக்கலாமா, என்றார். அத்தனை ஈடுபாடு அவருக்கு. அவர் உடம்பை விட இந்த படத்தின் பாட்டு நல்லாயிருக்கனும்னு நெனச்சார். அந்த வகையில், மருத்துவமனையில் இருந்து வந்ததும் முதன்முதலாக என் படத்துக்குத்தான் இசையமைத்தார் இளையராஜா.
வாயில் சிகரெட்,கையில் மது போஸ் கொடுத்த நடிகை கங்கனா ரஹாவத்துக்கு எதிர்ப்பு!
வாயில் சிகரெட்,கையில் மது போஸ் கொடுத்த நடிகை கங்கனா ரஹாவத்துக்கு எதிர்ப்பு!
மது, சிகரெட்டுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சிகரெட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு பெண்கள் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
பாலிவுட்டில் முன்னனி நடிகையான கங்கனா ரணாவத் ஜெயம்ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கங்கனா ரணாவத் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தார். அதில் ஆபாச உடையில் புகை பிடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் போஸ் கொடுத்து உள்ளார்.
கங்கனா ரணாவத், இதுபோல் போஸ் கொடுத்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மும்பையில் உள்ள மகளிர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகைகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படக் கூடாது. சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பணத்துக்காக கலாசார சீரழிவுக்கு வித்திடும் வகையில் நடிகைகள் இதுபோல் போஸ் கொடுப்பது தொடர்ந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)