தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம்!

ஒரு 7 நிமிட தமிழ் குறும்படம் பியூச்சர் பிலிம் அல்லாத கேட்டகிரியில் தேசிய விருது பெற்றுள்ளது. தர்மம் என்ற அந்த குறும்படம் ஏழரை நிமிடங்கள் ஓடக்கூடியது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் விருது பெற்ற இந்தப் படம், கேன்ஸ் திரைப்பட விழா வரை சென்று, தற்போது தேசிய விருதினை பெற்றுள்ளது. இதனை மனோன் எம்.அஸ்வின் என்பவர் இயக்கி இருக்கிறார். இதுவரை 7 குறும்படங்களை இயக்கி உள்ள இவர், தற்போது பிரபு சாலமனிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
ஒரு பணக்கார வீட்டு தம்பதிகள் தங்கள் மகனை பிச்சைக்கார சிறுவன்போல் வேடம் அணியச் செய்து பயிற்சி கொடுத்து பள்ளி மாறுவேட போட்டிக்கு அழைத்துச் செல்கிறார்கள். போகிற வழியில் போக்குவரத்து போலீஸ் லஞ்சம் வாங்குவதையும், அப்பா போக்குவரதுது போலீசுக்கு லஞ்சம் கொடுப்பதையும், வயதான நிலையில் பிச்சையெடுக்கும் முதியவரையும் சந்திக்கிறான். வீட்டில் சொல்லிக்கொடுத்த வசனங்களை மறந்து அந்த பிச்சைக்காரர் சொன்னதையே மேடையில் சொல்லி கைதட்டல் வாங்குகிறான். நிஜமான பிச்சைக்காரர் தர்மம் வாங்குகிறார் .மற்றவர்கள்தான் பிச்சை எடுக்கிறார்கள். இதுதான் குறும்படத்தின் அடிப்படை.
No comments:
Post a Comment