ராஜராஜசோழனின் போர்வாள் படத்தின் பாடல் கம்போசிங்கை மக்கள் மத்தியில் நடத்திய மேஸ்ட்ரோ இளையராஜா.சினேகன்
ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்றுதான் அப்படி செய்தோம். ஆனால், இதைப்பற்றி நான் இளையராஜாவிடம் சொன்னபோது, அது சாத்தியப்படுமா என்றார். ஆனால் கண்டிப்பாக ஆகும் என்றேன். உங்களுக்கு சாத்தியம் என்றால் நான் வருகிறேன் என்றார். அதையடுத்து ராஜராஜசோழனின் குரு கரூர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தை தேர்வு செய்து மக்கள் முன்னிலையில் பாடல் கம்போஸிங் செய்தார் இளையராஜா.
அதில் 25000 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுவரை எந்த இசையமைப்பாளர்களும் செய்யாத சாதனை அது. கரூரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமும், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கினோம்.
* அப்போது இளையராஜாவின் மனநிலை எப்படி இருந்தது?
அந்த நிகழ்வின்போது இளையராஜா கண் கலக்கிபோனார். 37 வருடமாக என்னை அடைத்து போட்டுவிட்டனர். இன்றைக்குத்தான் முழுசாக வேலை பார்த்த திருப்தி கிடைத்துள்ளது என்று சொன்ன இளையராஜா, எனது சரித்திரத்தில் சினேகனுக்கும் ஒரு இடம் உண்டு என்று சொன்னார். அந்த வார்த்தைதான் இந்த படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாகும்.
* சரித்திர கால கதை என்கிறபோது பட்ஜெட் எகிறுமே?
இந்த படத்தில் சரித்திர காலம், நிகழ் காலம் என இரண்டும் இடம்பெறுகிறது. இருப்பினும் தேவையான செலவை எந்த குறையும இல்லாமல் செய்திருக்கிறேன்.
மேலும், இந்த படம் மீது இளையராஜாவுக்கு பிரியமும், ஈடுபாடும் அதிகம். அவரைப்பற்றி ஆயிரம் பக்க அளவில் ஒரு புத்தகமே எழுதுவேன். அவர் ஒரு ஞான குழந்தை போல் செயல்பட்டுள்ளார். மேலும் அவரிடத்தில் இந்த இளையராஜா வேண்டாம் 80களில் உள்ள இளையராஜாதான் எனக்கு வேண்டும் என்றேன். பதிலுக்கு சிரித்தார். என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்யுங்கள் என்றேன். செலவுக்கணக்கைப் பார்க்கும் அளவுகோல் வேண்டாம். எனக்கு இளையராஜாதான் வேண்டும் என்றேன். அதனால் பாடல்களுக்கு தேவையான செலவை தாராளமாக செய்து பாடல்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில், இது இளையராஜாவின் படம். 1100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நீதி மன்னனுக்கும், இளையராஜாவின் இசைக்கும் இருக்கிற உறவுதான் இந்த படம். இந்த இடத்தில் இன்னொரு விசயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளையராஜா, திரும்பி வீட்டிற்கு வந்த உடனேயே என்னை அழைத்தார். நாளைக்கே ரெக்கார்ட்டிங் வச்சிக்கலாமா, என்றார். அத்தனை ஈடுபாடு அவருக்கு. அவர் உடம்பை விட இந்த படத்தின் பாட்டு நல்லாயிருக்கனும்னு நெனச்சார். அந்த வகையில், மருத்துவமனையில் இருந்து வந்ததும் முதன்முதலாக என் படத்துக்குத்தான் இசையமைத்தார் இளையராஜா.
No comments:
Post a Comment